தற்போது ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ஆர்த்தி, முன்பு பல படங்களில் நகைசுவை நடிகையாக இருந்து மக்களை கவர்ந்தவர். அவர் என்ன தான் எடையில் அதிகமாக காணப்பட்டாலும். அவரின் நகைசுவை சுறுசுறுப்பாக தான் இருக்கும். நல்ல வரவேற்பு பெற்று இருந்த இவருக்கு கரும்புள்ளியாக அமைந்தது அந்த தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
மேலும், இவர் அந்த தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஜூலிக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் மத்தியில் மிகவும் கேட்ட பெயர் எடுத்து, இவரது ரசிகர்கள் இவரை திட்டும் அளவிற்கு ஆளானார். இந்த நிலையில் அவருக்கு காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவர் ஒரு புகைப்படத்தை ட்விட்டர் ஷேர் செய்து காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள விஷயத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.