தீபாவின் புது தோற்றம்..!! இதற்காகத்தான் தலைமறைவாக இருந்தாரோ..?

தீபா தற்போது புது புது ஸ்டைலில் கலக்க ஆரம்பித்துள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப தீபாவின் பல மாற்றங்கள் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதுதான் விஷயமே.

ஆரம்பத்தில் சுடிதார் உள்ளிட்ட மாடர்ன் டிரஸ்ஸில் தீபா வலம் வந்தார். அதன் பிறகு, ஜெயலலிதா போல புடவைத் தலைப்பை மேலே சுற்றியபடி வர ஆரம்பித்தார்.

இப்போது தீபா தனது மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது.

அவரது முந்தைய முகத் தோற்றத்தையும், இப்போதைய தோற்றப் பொலிவையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

இன்று தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தீபா கலந்து கொண்டார். தீபாவின் புது தோற்றத்தை கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்கமாக புடவைத் தலைப்பை சுற்றிக் கொள்ளாமல் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.

ஒவ்வொரு விதமாக தீபா மாறி வருவதைப் பார்க்கும்போது.., அடுத்து சசிகலா ஸ்டைலில் ஜாக்கெட், புடவையுடன் வலம் வருவாரா..? என்று எண்ணத் தோன்றுகிறது.

என்ன ஒன்று, தீபா வந்தபோது அவரை வரவேற்க இருபுறமும் பெண்களை ஆரத்தித் தட்டுடன் நிற்க வைத்த காட்சிதான் சற்று அல்ல அல்ல.. ரொம்பவே ஓவராக இருந்தது.

அதனோடு, சில நாட்களாக தீபா தலைமறைவாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஒரு வேளை, இதற்காகத்தான் தலைமறைவாக இருந்தாரோ என்னவோ..?