பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள். அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம். இந்த படத்தை தொடர்ந்து இவர் மகளிர் மட்டும் என்ற படத்தில் பெண்கள் சம்மந்தபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் நாச்சியார் என்ற படத்தில் நடித்து அந்த படத்தின் டீசரும் வெளியானது இதில், ஜோதிகா பெண்களை இழிவு படுத்தும் விதமான கேட்ட வார்த்தையை பேசியுள்ளார். இதை கேட்ட மக்கள் ஜோதிகா மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். இந்நிலையில் ஜோதிகா, துல்கர் சல்மான் மற்றும் பிந்து மாதவி ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றனர் அந்த விழாவில் ஜோதிகாவுடன் இந்த கேட்ட வார்த்தை பற்றி கேட்க அவர் இந்த சர்ச்சைகள் படம் ரிலீஸ் ஆனதும் முடிந்துவிடும் எனவே இதை பற்றி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். அப்படி என்ன திருப்புமுனையாக இந்த வார்த்தை அந்த படத்தில் அமைந்திருக்கும் என்று படம் பார்த்தால் தான் புரியும்.