வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என யாழ்.பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில்.கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும், அவருடன் சுவிஸ்சில் சேர்ந்து இயங்கும் சிலரே யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளை செய்து வருகின்றனர் என இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துள்ளோம்.
அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸ்சில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். என கூறும் இலங்கைப் பொலிசார்
அதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா, பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மேலும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
சுவிஸ்சில் இலங்கைத் தமிழரின் இவ்வாறான நடவடிக்கைகளால் அகதி தஞ்சம் கோரியவர்களின் நிலையும் சிக்கல்களை எதிர் கொள்ளளாம் என கூறப் படுகிறது.