கவுண்டமணி, செந்தில்லிற்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியை வேறு லெவலுக்கு கொண்ட சென்றவர் என்றால் அது வடிவேலு தான். தற்போது 24ம் புலிகேசி படத்தில் நடித்துவருகிறார்.
வடிவேலுக்கு இரு மகள்கள் உள்ளனர். கார்த்திகா இரண்டாவது மகள் இவர் மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பள்ளியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையும் ஆவர். பள்ளி படிப்பை முடித்து பின் M.com படித்தார். பின் C.A முடித்து அகவுண்டண்டாக பணியாற்றி வருகிறார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் திகதி கார்த்திகா கனேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் IBM நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணம் மதுரை ராஜா முத்தையா திருமணமண்டபத்தில் நடந்தது. ஆனால் இவரது திருமணத்திற்கு எந்த ஒரு திரை பிரபலங்களுக்கும் வடிவேலு அழைப்பு விடுக்கவில்லை.
தனது நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து நடத்தியுள்ளார். இதில் பிரபலங்களை அழைக்காததற்கு காரணம் எதுவும் இதுவறை வடிவேலு கூறவில்லை.