பிரித்தானிய அரசு புதிதாக எந்த ஒரு இலங்கை, இந்திய அகதிகளின் விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 3ஆயிரத்து 535 அகதிகள் விண்ணப்பதித்த நிலையில் 838 அகதிகளின் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 48 பேரும் இந்தியாவைச்சேர்ந்த 82 பேரும் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும் அவர்களில் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானிய உள்துறை அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.