தேநீர்க் கழிவுகளில் இயங்கவுள்ள லண்டன் பேருந்துகள் !

தேநீர்க் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிபொருள் மூலம் லண்டன் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக லண்டன் நகர போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேநீர்க்    கழிவுகளில்   இயங்கவுள்ள    லண்டன்     பேருந்துகள்   !

இது அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். லண்டன் போக்குவரத்துத் துறையானது, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக இயற்கை எரிபொருள்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.

தேநீர்க் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மற்றும் டீசல் எண்ணெயைக் கலந்து, இயற்கை எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை எரிபொருள், ஒரு வருடம் முழுவதும் ஒரு பேருந்து இயங்கப் போதுமானது என, லண்டனின் பயோ-பீன் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டன் மக்களால் ஒரு வருடத்துக்கு இரண்டு இலட்சம் தொன் தேநீர்க் கழிவுகள் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

இதை, பயோ-பீன் லிமிடெட் நிறுவனமானது,  தேநீர்த் தொழிற்சாலைகளிலிருந்து வாங்கி, இயற்கை எரிபொருளைத் தயாரிக்கிறது.

‘ஒரு திறக்கப்படாத கழிவுப்பொருளின் மறுபரிசீலனையின் போது என்ன செய்யலாம் என்பதற்கு, இது ஒரு பெரிய எடுத்துக்காட்டு’ என்று அந்நிறுவனத்தின் நிறுவுநர் ஆர்தர் கே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.