கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது!

கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள் இனி செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-rupee-515x300டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இவை செல்லுபடியாகாது என்றும் அவை பெறுமதியற்றவையாகிவிடும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.