2017, 2018 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் நள்ளிரவு 12 மணிக்கு இன்று(03) பூரணை தினத்தில் ஆரம்பமாகியதாக சிவனொளிபதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பிக்கும் முகமாக, இரத்தினபுரி, பெல்மதுலை, கல்பொத்தாவல, ரஜமகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவவிக்கிரமும் பூஜை பொருட்களும் தாங்கிய இரதபவனி, அவிசாவளை, கினிகத்தேன, ஹற்றன், நோர்வூட், மஸ்கெலியா வழியாக நல்லத்தன்னி சிவனொளிபாத மலையடிவாரத்தை சென்றடைந்தது.
நள்ளிவு 12 மணிக்கு மலையடிவாரத்தை சென்றடைந்த இரத பவனி விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிவபூமிக்கு வருகைத்தரும் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகள் பூனித பூமியின் புனிதத்தை காக்குமாறும் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்றவையை கொண்டுவருவதை தவிர்க்குமாறும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாத்திரிகர்களின் நலன் கருதி விசேட, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் விசேட போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.