பெற்றெடுத்த தாயை பராமரிக்க முடியாத காரணத்தால் அவரை திருப்பதி கோயிலுக்கு அழைத்து சென்று அனாதை மகள் விட்டு வந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ரத்தினவள்ளி(70) என்பவருக்கு 4 மகன்கள்.
இதில் இரு மகன்கள் இறந்துவிட்ட நிலையில், எஞ்சியிருந்த இரண்டு மகன்களில் அசோகன், கணேசன் ஆகிய இருவரில் யாரோ ஒருவர், இவரை திருப்பதி கோயிலுக்கு அழைத்து சென்று அனாதையாக விட்டு வந்துள்ளார்.
இதனால், கோயில் வளாகத்தில் படுத்திருந்த மூதாட்டி தன் நிலையை தாங்கிகொள்ள முடியாமல் கோயிலுக்கு வந்து செல்பவர்களிடம் இறப்பதற்கு மாத்திரை இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இதனைப்பார்த்த பொதுமக்கள் ரத்தினவள்ளியின் மகன் கணேசனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, நான் சிறுகடை நடத்தி வருகிறேன், என்னால் எனது தாயை பராமரிக்க முடியவில்லை.
இதனால் அவரை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டேன். அங்கு இவர் இருந்த இடத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதால் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
இதனால் சென்னையில் வசித்து வரும் எனது அண்ணன் அசோகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவரும் என்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி திருப்பதிக்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார்.
இந்த தகவலை என்னிடமும் தெரிவித்தார். என்னால் எங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவே சிரமமாக உள்ளது. இதில் எங்களது தாயை பார்த்துக்கொள்வது கடினம் என கூறியுள்ளார்.
தற்போது, பொதுமக்கள் , ரத்தினவள்ளியை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.