திமுக வேட்பாளரை ஆதரிப்பது ஏன் – விளக்கமளிக்கும் இடதுசாரிகள்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவினுக்கு பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலானது, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாகக் கூறி தேர்தல் ஆணையத்தால் இரத்து செய்யப்பட்டது.

5a2372fa1dd0b-IBCTAMILஇந்நிலையில், மீண்டும் ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தலானது வரும் 21 ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளருக்கு விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

திமுக வேட்பாளரை ஆதரிப்பது ஏன் - விளக்கமளிக்கும் இடதுசாரிகள்.!

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக, அதிமுகவை தவிர்த்து, விசிகவின் முன்முயற்சியில் மக்கள் நலக்கூட்டணியானது உருவாக்கப்பட்டது. மாற்று அரசியலை முன்னிறுத்தியே உண்டாக்கப்பட்டது இந்த கூட்டணி.

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், தற்போதைய ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதாரவளித்துள்ளனர் விசிக மற்றும் இடதுசாரிகள். மாற்று அரசியலை முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணியை உண்டாக்கிய நீங்கள் எதற்காக வேண்டி திமுகவை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. ‘நாடு முழுவதும் மக்கள் விரோத, மதவாத ஆட்சியை செயற்படுத்திவருகிற பாஜகவை தோற்கடிக்கவே திமுகவை ஆதரிக்கிறோம்‘ என விளக்கமளிக்கின்றர் இடதுசாரிகள்.