மங்கோலியாவில் துறவி ஒருவர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தாமரை மீது யோக நிலையில் அமர்ந்து இருப்பதும், இவர் புத்தரின் யோக நிலையை அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தியான நிலையில் அமர்ந்து இருக்கும் அந்த யோகி இறக்கவில்லை என்றும் உயிருடன்தான் தியான நிலையில் இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. புத்தரின் நிலையை அடைவதற்கு ஒரு நிலை இன்னும் இருக்கிறது என்று மங்கோலிய மக்கள் நம்புகின்றனர். தடவியல் நிபுணர்கள் தற்போது இதற்கான ஆய்வில் இறங்கியுள்ளனர். இந்த யோகி பசுவின் தோலினால் போர்த்தப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பிரபல புத்த துறவி டாக்டர் பாரி கெர்சின் கூறுகையில், ‘’ஒருவர் அதே நிலையில் தியானத்தில் மூன்று வாரங்கள் இருந்தால் அவரது உடம்பு சுருங்கும். இறுதியில் அவரது உடம்பில் முடி, நகம், ஆடைகள் மட்டுமே மிஞ்சும்.
ஆனால், இந்த யோகியின் தியான நிலை வித்தியாசமாக உள்ளது. அவரது தியான நிலைக்கு மேலே வானில் ரெயின்போ பல நாட்கள் தெரிந்துள்ளது. இது அருகில் இருந்த துறவிகளுக்கு கண் கூடாக தெரிந்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, அவரது உடல் ‘’ரெயின்போ உடல்’’ என்று கருதப்படுகிறது. இந்த நிலை புத்தர் அடைந்த தியான நிலைக்கு ஈடானது என்றே கூறலாம். இவர் தொடர்ந்து இதே நிலையில் இருந்தால். புத்தருக்கு சமமானவர் என்றே இவரை அழைக்கலாம்’’ என்கிறார்.