யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், டீசலில் நீர் கலந்துள்ளதாக கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இதுதொடர்பிலான ஆய்வு பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை இந்த எரிபொருள் நிலையத்தின் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற மகிழுந்து ஒன்று பழுதடைந்தமையடுத்தே, குறித்த எரிபொருள் நிலையம் தொடர்பில் மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர்களுடன் பிரதேசமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கடந்த சில நாட்களாக வடக்கில் பெய்துவரும் மழையினால், நிலக்கீழ் எரிபொருள் தாங்கியில் நீர் கலந்திருக்கலாம் என இதன் முகாமையாளர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.