இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

 

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் அகற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

DSC08792

இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த காலத்தில் தங்களின் தேவைக்காகவும் அவர்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்ட புத்தக்கோவிலின் சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் இரணைமடுக்;குளம் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள் புனரமைப்பு காரணத்தால் இராணுவம் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து குளத்தின் அபிவிருத்திக்கு இடையூராக இருந்த காரணத்தால் புத்தர் கோவிலிருக்கும் புத்தர் சிலையை இராணுவத்தினர் அகற்றியுள்ளார்கள்.