ஆவா குழுவுக்கு நிதியுதவி மற்றும் அறிவுரை கிடைக்கப் பெறுவது, சுவிற்ஸர்ந்தில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் மூலம் என, காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழு தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சுவிஸர்லாந்திலுள்ள இந்தக் குழுவினர், தற்ப்போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், அக் குழுவில் இருக்கும் இருவர் தற்போது இலங்கைக்கு வந்திருப்பதாகவும் காவற்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அவர்கள் இருவரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்காகவே இலங்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையிலுள்ள பிரந்தன் எனும் ஒருவரிடமே குறித்த சுவிஸர்லாந்து தமிழ் அமைப்பினர் தொடர்பைப் பேணி வருவதாவும், அவர் வழங்கும் பணிப்புரைப்பு அமையவே ஆவா குழு செயற்படுவதாகவும், கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் கூறியுள்ளார்.
இதேவேளை ஆவா குழுவின் தோற்றம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரும் புலனாய்வளர்களும் என யாழ்ப்பாணத்தின் முக்கிய தரப்புகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடக்கில் மக்கள் தொகைக்கு ஈடாக படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் வாள்கள் கத்திகள் ஆயுதங்களுடன் அனைவருக்கும் சவால் விடுக்கும் வகையில் ஒரு குழு எப்படி செயற்பட முடியும்? என்ற கேள்விகள் அனைவரையும் துளைத்தெடுக்கும் போது.
ஆவா குழுவை புலம்பெயர் அமைப்புகளுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புபடுத்துவதும். மாவீரர் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்துவதும், அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகளா என வடக்கின் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.