2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்படலாம் என தகல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போவது யார்? என்று தற்போதும் நாட்டில் பிரபல்யமாக உள்ள ஐந்து பேரின் பெயர்களை முன்னிலைப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
கருத்துக்கணிப்பின் முடிவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார் என்று அதிகமானவர்கள் கூறியுள்ளனர்.
18 தொடக்கம் 35 வயதுவரையான 505 பேரிடம் நடத்திய இந்த விசேட கருத்துக்கணிப்பில் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 39.18 வீதமானவர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கும், 28.64 வீதமானவர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும், 9.18 வீதமானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், 8.64வீதமானவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கும் வாக்களித்துள்ளனர்.
நாட்டில் செப்டெம்பர் முதல் நவம்பர் மாதம் வரையானக் காலப்பகுதியை இடம்பெற்ற அரசியல் நிலைமையைகளை அடிப்படையாக கொண்டு இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.