“காதலுக்கு கண்ணில்லை!

பிரித்தானியாவை சேர்ந்த ஹைதி என்ற 44 வயது தாய் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தனது காதலனுக்காக தான் பெற்றெடுத்த 9 குழந்தைகளின் விட்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹைதி என்ற பெண்மணிக்கு ஆண்டி என்ற நபருடன் திருமணமாக 9 குழந்தைகள் உள்ளனர்.

இந்த குழந்தைகள் அனைவரும் 11 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். இதில், ஹைதிக்கு முதல் திருமணத்தின்போது பிறந்தது 4 குழந்தைகள், இரண்டாவது கணவர் ஆண்டிக்கு பிறந்த குழந்தைகள் 5 ஆகும்.

ஹைதி பேஸ்புக் வாயிலாக தன்னைவிட 12 வயது சிறியவரான செலியூ என்பவருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர்.

தற்போது, செலியூவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறார் ஹைதி.

இதுகுறித்து இவர் கூறியதாவது, வாழ்க்கையில் என் நம்பிக்கைக்குரிய நபரை தற்போது தான் சந்தித்துள்ளேன். ஆண்டியுடன் எனது திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒரு முறை அவரது மொபைலில் பெண் ஒருவரின் புகைப்படத்தை நான் பார்த்தேன், அன்றிலிருந்து எங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஆரம்பமானது.

எனது குடும்ப பிரச்சனையின் போது எனக்கு பக்கபலமாக இருந்தது செலியூ தான், இதனால் தான் அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கை வந்தது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டோம்.

எங்கள் இருவரின் உறவுக்கு எனது குழந்தைகள் ஒருபோதும் தடையாக இல்லை, அவர்களும் செலியூடன் நன்றாக பழகுகிறார்கள்.

யாராலும் எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த இயலாது, அப்படி எனது குழந்தைகள் இடையூறாக இருந்தால், நான் அவர்களையும் விட்டுச்செல்வேன்.

கடந்த அக்டோபர் மாதம் செலியூவை பார்ப்பதற்காக Gambia சென்றேன், அவரை பார்த்தவுடன் ஆசையில் அவரை இறுக கட்டியணைத்துக்கொண்டேன்.

சிறிய பண்ணை ஒன்றை நடத்தி வரும் அவரது குடும்பத்தினர், நன்றாக என்னுடன் பழகினார்கள்.

இனி அடுத்த ஆண்டு Gambia சென்று செலியூவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் ,எனது பிள்ளைகள் எனது உலகமாக இருந்தாலும், செலியூதான் எனது எதிர்காலம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90  "காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம் 625625.0.560.350.160.300.053.800.668.160.90  "காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம் 625625.0.560.350.160.300.053.800.668.160.90  "காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம் 625625.0.560.350.160.300.053.800.668.160.90  "காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம் 625625.0.560.350.160.300.053.800.668.160.90  "காதலுக்கு கண்ணில்லை!: 22 வயது காதலனுக்காக 9 குழந்தைகளை விட்டு செல்ல தயார்: 44 வயது தாயின் வாக்குமூலம் 625