யாழ்ப்பாணத்தில் இப்படியொரு மோசடியா?

யாழ்ப்பாணத்தில் மோசடியான முறையில் டீசல் விநியோகம் செய்த எரிபொருள் நிலையத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் பிரதேசத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் விநியோகிக்கும் டீசலில் அரைவாசிக்கு அரைவாசி நீர் கலக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10917-1-77685fee17ef7235d1df0bac7be09720எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பொலிஸார் பரிசோதனையை மேற்கொண்டனர். மாதிரியை உரிய முறையிட்டு சோதனையிட்ட அறிக்கை பெற்றுக்கொள்ளும் வரையில் டீசல் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்று வயலுக்கு சென்ற சாரதிகளின் ட்ரெக்டர்கள் இடை நடுவில் செயலிழந்துள்ளன.

இதனால் கோபமடைந்த சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொக்குவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த நாட்களில் பெய்த அடைமழை காரணமாக எண்ணெய் தொட்டிக்குள் மழைநீர் சென்றிருக்க கூடும் என குறித்த எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.