பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நான் தான் ஜெயலலிதாவின் மகள். இதனை நிரூபிப்பதற்காக எனக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனோடு, இது குறித்து அம்ருதா கர்நாடக நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அது குறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அம்ருதா, நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று பலருக்கு தெரியும். ஓபிஎஸ்-க்கு இது நன்றாகவே தெரியும். எனக்கு சசிகலா குடும்பத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து விசாரித்த போது, ‘ஜெயலலிதாவின் சகோதரி என்று சொல்லிவந்த சைலஜாவின் மகள்தான் அம்ருதா.
இவ்வளவு நாளாக ஜெயலலிதாவைப் பெரியம்மா எனச் சொல்லிவந்தவர், இப்போது அம்மா எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அற்குக் காரணமாக எல்லோரும் பெங்களூருவில் இருக்கும் ரஞ்சனி ரவீந்திரநாத்தைத்தான் கை காட்டுகிறார்கள்.
இந்த ரஞ்சனி ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் நெருங்கிய உறவுக்காரர். இவர் அடிக்கடி போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவை சந்திப்பார். அப்போது, சசிகலாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகா சிறைக்குச் சென்று சசிகலாவையும் இந்த ரஞ்சனி சந்தித்துள்ளார். சிறைக்குள் இருந்த சசிகலாவுடன் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
அதன் பிறகு, அம்ருதாவை அழைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதாவை சந்தித்திருக்கிறார்.
லலிதாவிடம் அம்ருதா கோர்ட்டுக்கு போக போறதை பற்றி ரஞ்சனி பேசியிருக்கிறார்.
அதற்கு லலிதாகவும் , ‘ஜெயலலிதா புள்ளை யாருன்னு கண்டுபிடிச்சா சந்தோஷம்தான். கண்டுபிடிங்க.. ஆனா நான் எங்கேயும் வரலை…’ என ஒதுங்கிக்கொண்டாராம்.
அதன் பிறகு, ரஞ்சனி துணையோடுதான் டெல்லி வரை போனார் அம்ருதா. இப்போதும் ரஞ்சனி கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.
ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா கூறியது பற்றி இதுவரை எடப்பாடி-ஓபிஎஸ் இருவரும் வாய் திறக்கவில்லை.
ஒரு பக்கம் தீபா ஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடி வருகிறார். இதனால், அம்ருதா மூலம் ஜெயலலிதாவின் சொத்துக்களை தன்னுடைய பக்கம் கொண்டு வந்து விடலாம் என்று சசிகலா நினைக்கிறார்.
ரஞ்சினி, அம்ருதா இருவரும் சசிகலா சொல்வதை மீற மாட்டார்கள் என்பதால் அவர்களை வைத்தே காரியம் சாதித்துவிடலாம் என்று மன்னார்குடி குடும்பம் திட்டமிட்டுள்ளதாம்.
ஜெயலலிதாவுக்கு வாரிசு இருக்கிறதா..? அப்படி இருந்தால் அது அம்ருதாவா..? என்பதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடியது டி.என்.ஏ. பரிசோதனைதான். அது நடந்தால்தான் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.