சாய் பல்லவி நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தம்.!

NTLRG_20160628153724797662

தமிழ் பெண்ணாக இருந்தாலும் மலையாள ப்ரேமம் படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர் நடிகை சாய் பல்லவி இவர் அந்த படம் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அணைத்து மொழிகளிலும் ரசிகர்களை சம்பாரித்தார். இவர் சேகர் கம்முலா இயக்கிய பிடா படத்தில் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் ஹிட்டடித்ததை அடுத்து தற்போது நானிக்கு ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துள்ளார். மேலும் கரு படத்திலும் நடித்துவருகிறார்.

சாய் பல்லவி நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தம்.!

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்திலும் நாயகியாக நடிக்கிறார் சாய் பல்லவி. நிதின் நடிப்பில் படம் தயாரிக்கும் தில்ராஜூ சாய் பல்லவியை ஹீரோயினாக்க அவரை கேட்டுள்ளார். கதை கேட்ட சாய் பல்லவிக்கு பிடிக்கவில்லை. படத்தில் நடிக்க முடியாது என்று நேரடியாகவே சொல்லிவிட்டாராம். அதனால் இப்போது சாய் பல்லவி நடிக்க மறுத்த அந்த வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.