2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் தனித்தனியாக நடத்துவதில் அரசாங்கத்திற்கு எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் தேர்தலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் தேர்தல் பெப்ரவரி மாதம் நடைபெறும் என ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.