சுவிட்சர்லாந்தில் உள்ள Albinen கிராமம் ஒன்றில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வசிப்போருக்கு 70,000 பிராங்குகள் நிதி உதவி வழங்கப்படும் என குறித்த கிராமம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் கிராமத்தின் நிர்வாகிகள் இந்த திட்டம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதில் வெற்றி பெற வேண்டும் எனவும் பயன்பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கண்டிப்பாக சுவிஸ் நிரந்தரக் குடியுரிமை ஆணை இருத்தல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறைந்தபட்சம் 200,000 பிராங்குகள் குறித்த கிராமத்தில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் குறித்த கிராம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.