ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தால் அது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோர்டான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் புதன்கிழமை ட்ரம்ப் இது தொடர்பிலான தீர்மானத்தை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவது குறித்து இதுவரை தீர்மானமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகரும் மற்றும் அவரது மருமகனுமான ஜெராட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கிகரிக்கப்பட்டால், அது அரேபிய நாடுகளின் மத்தியில் வன்முறைகளை தூண்டிவிடும் என ஜோர்டனின் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளருடனும் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.