சென்னை: ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை என்றும் ஹைதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள், வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் என அழைத்துக் கொள்ளும் வாசுதேவன் கூறியுள்ளார்.
வாசுதேவன், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவிலுள்ள ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறார். எனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் நான் ஜெயலலிதாவை சொந்த தங்கையாகவே நினைத்தேன் என்று கடந்த ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்த போது கூறினார் வாசுதேவன்.
தற்போது ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அம்ருதா. இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான ரஞ்சனி, லலிதாவும் உதவி வருகின்றனர். இந்த நிலையில் சன் நியூஸ் டிவி சேனலுக்குப் பேட்டியளித்துள்ள வாசுதேவன், இரண்டு குழந்தைகள் ஜெயலலிதாவிற்கு பிறந்ததாக கூறியுள்ளார்.
திருமணம் முடித்து வைத்த ஜெயலலிதா அந்த பேட்டியில், ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மைதான்; ஹைதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள். ஜெயலலிதாதான் திருமணம் செய்து வைத்தார். அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் வாசுதேவன். யாருடனும் தொடர்பு இல்லை மேலும், ஜெயலலிதாவிற்கு சென்னையில் பிரசவம் பார்த்தார்கள் என்று சொல்லுவது தவறான தகவல்; ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
சொத்துக்களுக்கு வாரிசு ஜெயலலிதாவிற்கு சோபன்பாபு மூலம் குழந்தை பிறந்தது என்று சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் வாசுதேவன் கூறினார். தீபா பேசமாட்டார் தனது தம்பி மகளான தீபா தற்போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் வாசுதேவன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியும் பரபரப்பான செய்தி வெளியானது. இந்த ஆண்டு அவருக்கு குழந்தை இருந்தது உண்மையா? அதுவும் 2 குழந்தைகளா? என்றும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.