பேரிடர் நிதி வாங்க தயாராகும் தமிழக அரசு… அமைச்சர் தகவல்

பேரிடர் நிதி வாங்க தயாராகும் தமிழக அரசு... அமைச்சர் தகவல்

ஒகி புயலின் பாதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம் எனவும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்க கடலில் உருவான ஒகி புயல் தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடுமையாக உலுக்கி போட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுசொத்துக்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒகி புயலால் ஏற்பட்டுள்ளதாக பாதிப்புகளை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை வைத்து மத்திய அரசிடம் பேரிடர் நிதி கோரப்படும் என தெரிவித்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் பொதுபோக்குவரத்து, மின்சாரம் ஆகிவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீர்செய்யப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.