டிசம்பர் 5 & 6 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

1447581719-929தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஓகி புயலாக உருமாறி கடந்த 30-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது.

கன்னியாகுமரி மட்டுமல்லாமல், கேரளாவின் பல்வேறு பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓகி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன.

மேலும் சுறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் வெளியே வர முடியாத ஒரு சூழல் உருவானது.

நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்கு திருப்ப வில்லை. பல்வேறு இடங்களில் இன்னும் சாலைகள் சரி செய்யப்படவில்லை.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஓகி புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.