மாகாண சபை­த் தேர்­த­லுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு!

மாகாண சபை­த் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ண­யத்­துக்­காக முன்­மொ­ழி­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 8 தொகு­தி­கள் அந்­த­வ­கை­யில் முன்­மொ­ழி­யப் பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணம்–தீவ­கம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட தொகு­தி­யாக முன்­மொ­ழி­வு­ சமர்ப்பிக் கப்பட்டுள்ளது.

12927இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது:

மாகாண சபைத் தேர்­த­லின் புதிய திருத்­தத்­துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரி­யா­க­வும் 50 வீதம் விகி­தா­சார ரீதி­யா­க­வும் பிர­தி­நி­தி­கள் தேர்வு இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் மாவட்ட ரீதி­யி­லான எல்லை நிர்­ண­யம் தொடர்­பில் கருத்­துக்­கள் பெறப்­ப­டு­கின்­றன.

மாகாண சபைத் தேர்­த­லில் ஒரு தொகு­தி­க்கு குறைந்த பட்­சம் 70 ஆயி­ரம் மக்­களை உள்­ள­டக்­கிய வகை­யில் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்டை 8 தொகு­தி­க­ளாக பிரிக்க வேண்­டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­ன­டிப்­ப­டை­யில் 5 லட்­சத்து 83 ஆயி­ரத்து 882 மக்­க­ளை­யு­டைய யாழ்ப்­பாண மாவட்­டத்­தில், யாழ்ப்­பா­ண பிர­தேச செய­லர் பிரி­வில் 50 ஆயி­ரத்து 759 மக்­க­ளு­டன், நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை தெற்கு மற்­றும் வடக்­குப் பகு­தி­களை உள்­ள­டக்­கிய 29 ஆயி­ரத்து 848 அங்­கத்­த­வர்­களை உள்­ள­டக்­கிய வகை­யில் ‘யாழ்ப்­பா­ணம்–தீவ­கம் தொகுதி’ என­வும், நல்­லூர்ப் பிர­தேச செய­லர் பிரி­வில் உள்ள 68 ஆயி­ரத்து 142 மக்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணம் பிர­தேச செய­லர் பிரி­வின் கீழ் உள்ள ஜே/ 61, 257, 258, 259 ஆகிய கிராம சேவ­கர் பிரி­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய வகை யில் 75 ஆயி­ரத்து 784 அங்­கத்­த­வர்­க­ளு­டன் ‘நல்­லூர்த் தொகுதி’ என­வும் காரை­ந­கர் பிர­தேச செய­ல­கத்­தின் 9 ஆயி­ரத்து 576 மக்­க­ளை­யும், வலி­கா­மம் மேற்கு பிர­தேச செய­ல­கத்­தின் 46 ஆயி­ரத்து 438 மக்­க­ளை­யும், வலி­கா­மம் தெற்கு பிர­தேச செய­ல­கத்­தின் கிராம சேவ­கர் பிரி­வு­க­ளான ஜே/ 131, 132,133,134, 135,136 மற்­றும் 141, 142,143,144 ஆகிய 10 கிராம சேவ­கர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய 21 ஆயி­ரத்து 895 மக்­கள் வாழ் பிர­தே­சத்தையும் இணைத்து 77 ஆயி­ரத்து 909 அங்­கத்­த­வர்­களை உள்­ள­டக்­கிய வகை­யில் ‘வட்­டுக்­கோட்­டைத் தொகுதி’ என­வும், வலி. வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வின் 29 ஆயி­ரத்து 518 மக்­க­ளை­யும் வலி. தெற்­கின் கிராம சேவ­கர் பிரி­வு­க­ளான ஜே/195 முதல் ஜே/211 வரை­யான 17 கிராம சேவ­கர் பிரி­வில் வாழும் 28 ஆயி­ரத்து 232 மக்­க­ளை­யும் வலி­கா­மம் தென்­மேற்கு பிர­தேச செய­ல­கத்­தின் ஜே/145 முதல் 156 வரை­யான கிரா­மங்­க­ளின் 19 ஆயி­ரத்து 762 மக்­க­ளை­யும் இணைத்து 76 ஆயி­ரத்து 762 மக்­க­ளு­டன் ‘காங்­கே­சன்­து­றைத் தொகுதி’ என­வும் முன்­மொ­ழியப்பட் டுள்ளன.

இதே­போன்று சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரி­வின் 64 ஆயி­ரத்து 704 மக்­க­ளு­டன், வலி. தெற்கு பிர­தேச செய­லர் பிரி­வின் ஜே/ 280 வாத­ர­வத்தை கிரா­மத்­தின் ஆயி­ரத்து 35 மக்­க­ளை­யும் வட­ம­ராட்சி தெற்கு மேற்கு பிர­தேச செய­ல­கத்­தின் ஜே/382 கப்­பூது கிரா­மத்­தின் 280 மக்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய வகை­யில் 66 ஆயி­ரத்து 19 மக்­க­ளுக்­கு­மாக ‘சாவ­கச்­சே­ரித் தொகுதி’ கோரப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று வட­ம­ராட்சி வடக்கு பிர­தேச செய­ல­கத்தை உள்­ள­டக்­கிய 47 ஆயி­ரத்து 565 மக்­க­ளை­யும், வட­ம­ராட்சி கிழக்கு பிர­தேச செய­ல­கத்­தின் 12 ஆயி­ரத்து 766 மக்­க­ளை­யும் வட­ம­ராட்சி தென் மேற்கு பிர­தேச செய­ல­கத்­தின் கிராம சேவ­கர் பிரி­வு­க­ளான ஜே/370 முதல் 374 வரை­யான 5 கிராம சேவ­கர் பிரி­வு­க­ளு­டன் ஜே/378, 379,380 ஆகிய 8 கிராம சேவ­கர் பிரிவை­யும் சேர்ந்த 9 ஆயி­ரத்து 551 மக்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய வகை­யில் மொத்­த­மாக 69 ஆயி­ரத்து 882 மக்­கள் பிர­தே­சத்தை ‘பருத்­தித்­துறை தொகுதி’ என­வும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

இதே­நே­ரம் வலி­கா­மம் கிழக்கு பிர­தேச செய­ல­கத்­தின் ஜே/260 முதல் ஜே/270 வரை­யான 11 கிராம சேவ­கர் பிரி­வி­னைச் சேர்ந்த 31 ஆயி­ரத்து 666 மக்­கள் பிர­தே­சத்தையும், விலி. தெற்கு பிர­தேச செய­ல­கத்­தின் ஜே/182 முதல் ஜே/194 வரையான 13 கிராம சேவ­கர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பகு­தி­யின் 24 ஆயி­ரத்து 784 மக்­கள் பிர­தே­சத்தை யும் வலி­கா­மம் தென் மேற்கு பிர­தேச செய­லகப் பிரி­வின் கீழ் உள்ள ஜே/ 129, 130, 137, 138, 139, 140 ஆகிய ஆறு கிராம சேவ­கர் பிரி­வின் 11 ஆயி­ரத்து 362 மக்­க­ளு­மாக மொத்­தம் 67 ஆயி­ரத்து 812 மக்­கள் பிர­தே­சத்­தி­னை­யும் ‘கோப்­பாய் – மானிப்­பாய் தொகுதி’ என­வும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறே எட்­டா­வது தொகு­தி­யாக வட­ம­ராட்சி தெற்கு மேற்கு பிர­தேச செய­ல­கத்­தில் பருத்­தித்­துறை தொகு­திக்­குள் அடங்­காத ஏனைய கிரா­ம­சே­வ­கர் பிரி­வில் வசிக்­கும் 35 ஆயி­ரத்து 899 மக்­கள் பிர­தே­சத்தையும், வலி­கா­மம் கிழக்கு பிர­தேச செய­ல­கத்­தின் ஜே/271 முதல் 279 வரை­யும் , ஜே/ 281 முதல் 287 வரை­யு­மான 16 கிராம சேவ­கர் பிரி­வின் 33 ஆயி­ரத்து 604 மக்­கள் பிர­ தேசத்தையும் இணைந்த வகை­யில் ‘உடுப்­பிட்டி அச்­சு­வே­லித் தொகுதி’ என­வும் முன்­மொ­ழிந்த வகை­யி­லேயே 8 தொகு­ தி­க­ளும் கோரப்­பட்­டுள்­ளன.