அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பில்கேட்ஸின் அறக்கட்டளை தடுப்பூசி பரிசோதனைகள் சார்ந்த நடவடிக்கைகளில் கடும் சவால்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
பில்கேட்ஸ்க்கும் தடுப்பூசிகளுக்கு என்ன சமந்தம்.?
2014ம் ஆண்டு இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் பில்கேட்ஸ் நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பிய பிறகே பில்கேட்ஸ் பற்றி கசப்பான உண்மைகள் வெளிவர துவங்கின
2009 ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் ஹியூமன் பாபில்லோமா வைரஸ் என்ற கர்ப்பப்பை வாயில் ஏற்படும் கேன்சருக்கான் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது. 16000 பெண்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடப்பட்ட பெண்களின் உடல்நிலை மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டது. இதில் 5 பெண்கள் பரிதாமாக உயிரிழந்தனர். மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்கையில் இந்த பரிசோதனை கவனத்திற்கு வந்தது.
இங்கு மட்டுமல்ல, குஜராத்தில் ஒரு பழங்குடி கிராமத்தில் 14000 பெண்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு, இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
இதே தடுப்பூசி மருந்தை பயன்படுத்திய 2 கொலம்பியா பெண்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதன் பின்னர் தான் இந்திய அரசு சாரா நிறுவனம் (என்ஜிஓ) ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் ஆய்வு செய்தது. அதில் பல உண்மைகள் தெரியவந்தது
இந்த தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள், வலிப்பு நோய், தலைவலி, மனநிலை பாதிப்பு, மாதவிடாய் பிரச்சனைகள், அதிக இரத்த போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
படிப்பறிவில்லாத ஏழை மக்களிடம் சுகாதார பராமரிப்பு என்ற பெயரில் சுமார் 30,000 பெண்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்திய கொடூர உண்மை வெளிவந்தது
அரசு எப்படி இதை முறையாக ஆராயாமல் உள்ளே விட்டது என்பது தான் பெரிய கேள்வி..? ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்கின்றனர்..?
இந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும், இந்தியா மட்டுமின்றி வியட்நாம், உகான்டா போன்ற நாடுகளில் இதுபோன்ற விபரீதமான பரிசோதனைகள் இன்றளவும் அரசின் முறையான அனுமதி பெற்று நடந்து கொண்டு தான் இருப்பதாக கூறப்படுகிறது.
நம் இந்திய மக்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தி, அவர்களை கொன்ற இந்த நிகழ்வுகளுக்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?