பதவிவிலக வேண்டும் என கூறும் சேரன்! விஷால் அளித்த பதில்!

“விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும்” என சேரன் கூறிவருகிறார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான 8 மாதத்தில் வேலைகள் எதையும் விஷால் நிறைவேற்றவில்லை, அவர் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதிக்கப்படும் என்று சேரன் குற்றம்சாட்டினார்.

cheran-vishal-750x506இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள விஷால் கூறியிருப்பதாவது..

“சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் விஷால் கட்சி தொடங்குவதற்காக அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் களமிறங்குகிறேன். அரசியல்வாதியாக இல்லாமல ஆர்.கே.நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.