ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்த பின் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் நவம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக, நாம்தமிழர், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஏற்கனவே களத்தில் இறங்கியுள்ளனர். “மக்களின் துயரங்களை போக்குவதற்காக தானும் அரசியலுக்கு வருவதாக நடிகர் விஷால் தெரிவித்ததோடு இன்று வேட்புமனுதாக்கலும் செய்ய உள்ளார்.
இந்நிலையில் அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஆர்கேநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் விஷாலுக்கு வாழ்த்துக்கள். விஷால் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.