பன்றியின் பித்தப்பை கல்! கோடீஸ்வரரான விவசாயி: நடந்த ஆச்சரியம்!

சீனாவில் பண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி கோடீஸ்வரர் ஆன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்தவர் போ சுன்லோ (51). விவசாயியான இவர் தனது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதை விதைத்திருந்த நிலையில் அந்த நிலத்தில் உழுதார்.

201712041051116506_Chinese-man-set-to-become-millionaire-after-finding-pigs_SECVPFஅப்போது 4 இஞ்ச் நீளமும், 2.5 இஞ்ச் அகலமும் கொண்ட ஒரு வித்தியாசமான கல் அவருக்கு கிடைத்தது.

அதன் மீது அடர்த்தியாக ரோமங்கள் மூடி இருந்த நிலையில் அது பற்றிய விவரங்கள் தெரியாமல் தனது நண்பர்களிடம் சுன்லோ விவாதித்தார்.

அப்போது தான் அது பன்றியின் பித்தப்பையில் உருவாகிய கல் என தெரிய வந்தது.

கோரோசனை என அழைக்கப்படும் கல்லானது பலவிதமான நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.

சுன்லோவிடம் கிடைத்துள்ள பித்தப்பை கல் சீனாவில் விலை மதிக்க முடியாததாகும்.

கல்லானது ரூ.8 கோடியே 70 லட்சம் விலை போகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் திடீர் கோடீஸ்வரராக மாறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.