பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி அமைக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெறும் தொடர் தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீதின், ஜமாத் – உத்தவா பயங்கரவாத அமைப்புடன் அரசியல் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 2018ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந் நிலையில் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து வெளிநாட்டில் தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ”பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட ‘மெகா’ கூட்டணியை அமைத்துள்ளதாகவும். மேலும் கூட்டணியில் ஹபீஸ் சயீது தலைமையிலான, ஜமாத் உத்தவா அமைப்பைச் சேர்க்க தயாராக உள்ளேன்” என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் செயல்படும்லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பதாக சமீபத்தில் முஷாரப் அறிவித்திருந்தார். இதனையடுத்து மற்றொரு பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

201711111752320898_Pervez-Musharraf-forms-grand-alliance-of-23-political_SECVPF