சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்ட இந்திய குழந்தைகள் தற்போது அங்கு நல் வாழ்க்கை வாழ்ந்து வருவதை அமெரிக்க பெண் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஓகியோ மாகாணத்தை சேர்ந்த Kristen Williams என்ற பெண்மணிக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாதிருந்தபோதிலும், தான் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், பல்வேறு குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.
அதில், ரூபா என்ற சிறுமியின் மூக்கை நாய் கடித்து சாப்பிட்டுவிட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்துள்ளது. இதனால் பல பேர் இவரை தத்தெடுக்க முன்வரவில்லை என அனாதை இல்லம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அச்சிறுமியை தத்தெடுத்துள்ளார்.
இவருடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் கடந்த 2013 ஆம் ஆண்டு தத்தெடுத்துள்ளார். இவரது முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது. இவர்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்து சென்ற Kristen, தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதியை திரட்டியுள்ளார்.
அந்த நிதியுடன் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகியுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்துள்ளன.
தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக Kristen தெரிவித்துள்ளார்