ஜேர்மனி நாட்டில், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் டியூசெல்டோர்ப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (04.12.2017) மாலை 150 இற்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த தொடருந்து, எதிர்பாராத விதமாக மற்றுமொரு சரக்குத் தொடருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் இதுவரை பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.