மக்களுக்குத் தேவையற்ற பயவுணர்வை தோற்றுவிக்க வேண்டாம் !

ஐயப்பாடான  விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பொது மக்களுக்குத் தேவையற்ற பயவுணர்வை தோற்றுவிக்கக்கூடாது. இதனால் வேறு அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்குத்  தேவையற்ற பயவுணர்வை தோற்றுவிக்க வேண்டாம் !

சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய நிலை, பாணந்துறை பிரதேசத்தில்  இருப்பதாக   சமூக ஊடகங்களில் தகவல்  வெளியாகின. இது உண்மைக்கு புறம்பானது என்று  பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி  மேலும் தெரிவித்தார்.

சுனாமி அல்லது திடீர் அனர்த்தம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு 24 மணித்தியாலம் செயற்படும் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் எம்மை தொடர்பு கொள்ளமுடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.