தமிழ் படம் பார்ட் 2 உறுதி செய்யப்பட்டுள்ளது.! ஹீரோவாக சிவா..!

தமிழ் படம் பார்ட் 2 உறுதி செய்யப்பட்டுள்ளது.! ஹீரோவாக சிவா..!

தற்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என்று எடுப்பது பேஷனாக வருகிறது. பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த மாதிரி புது புதுப்படங்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் தான் தமிழ் படம். தற்போது இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு இதன் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சிவா நடிக்கவுள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கவிருக்கிறார்.

தமிழ் படம் பார்ட் 2 உறுதி செய்யப்பட்டுள்ளது.! ஹீரோவாக சிவா..!

மேலும் தமிழ் படம் முதல் பார்ட்டை இயக்கிய அமுதன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் 11 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்திலும் மற்ற ஹீரோ மற்றும் ஹீரோயின்களை கிண்டல் செய்து எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை சுசி கனேஷன் தயாரிக்கிறார்.