பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரே தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே லண்டன் நகரில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகின்ற நிலையில், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் அந்நாட்டு பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சந்தேநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 12 மாதங்களில் 9 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.