தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்… கொந்தளிக்கும் செயல் தலைவர்

தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்... கொந்தளிக்கும் செயல் தலைவர்

ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ள தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயச்சையாக களமிறங்க நடிகர் விஷால் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இருப்பினும் வேட்பு மனு படிவத்தில் கையொப்பம் இட்டுள்ள 10 தொகுதி வாக்காளர்களில் இரண்டு பேரின் கையெழுத்து போலியானது என கூறி வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆளும் அதிமுக கட்சிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுகவுக்கு சார்பாக நடந்துகொண்ட தேர்தல் அலுவலர் வேலுசாமியை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகொள்விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக வரும் 11ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்போவதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.