வடக்கில் உதயமாகிய புதிய கூட்டமைப்பு!

வடக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

suresh-01யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே இக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அ. ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களே கட்டுப்பணத்தை  இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.,  தமிழரசுக்கட்சி கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதென தெரிவித்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டமைப்பொன்றை அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை  குறிப்பிடத்தக்கது.