பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா காலத்தித்து வந்தது அனைவர்க்கும் தெரிந்தது தான். சில நேரத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூட பேசப்பட்டது. பிறகு சில நாட்கள் கழித்து இருவரும் இணைந்தார்கள்.
பல கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுஷ்கா சென்றார். மேலும், விராட் போகும் இடம் எல்லாம் அனுஷ்காவும் சென்று வந்தார். அதைத்தொடர்ந்து, மும்பை, டில்லி உள்ளிட் சில முக்கிய நகரங்களில் நிலம் வாங்கியுள்ளனர். இந்த இடங்களில் இருவரும் இணைந்து ரெஸ்டாரன்ட் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான பணிகளை இருவரும் துவங்கிவிட்டதாகவும், விரைவில் ரெஸ்டாரன்ட் துவங்கப்படும் என்றும் ஒரு செய்தி வந்தது.
இந்த நிலையில், இருவரும் இம்மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது. இதாலியில் நடக்கப்போகும் இவர்களது திருமணம் டிசம்பர் 9ல் இருந்து 12ல் ஒரு நாளில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண தேதி இன்னும் பிரபலங்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.