யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த அனைவரும் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளமையானது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதிமன்ற நீதிபதி ஏ.யுட்சன் உத்தரவிட்டுள்ளார்.