மீடியாக்களில் கொஞ்ச நாட்களிலே அதிகம் பேசப்பட காரணம் என்று ஆராயும் போது, கிடைத்த அற்புத தகவல்கள்..!!

கலெக்டர் ரோஹிணி, சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர். 1970ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை 170 ஆட்சியர்களை கண்ட சேலம் மாவட்டம் முதலாவதாக ஒரு பெண் ஆட்சியரை தற்போது கண்டுள்ளது

32 வயதாகும் ஆட்சியர் ரோஹிணி, மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் சாதாரண விவசாயி மகளாக பிறந்தவர்.

அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு, அரசுக்கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டம் முடித்த இவர் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக எந்த பயிற்சி வகுப்புகளுக்குமே சென்றதில்லை என்பது தனிச்சிறப்பு..

எந்த சிறப்பு வகுப்பிற்கும் செல்லாமல் ஆட்சியாளராக உள்ளார் என்பது மிகவும் முக்கியமானது

பிறந்தது மகாராஷ்ட்ர மாநிலம் என்றாலும் 9 ஆண்டுகளாக தனக்கு தமிழ் கற்றுத்தந்த மதுரையை தாம் மிகவும் நேசிப்பதாக பூரிப்படைகிறார்.

மதுரைத் தமிழில் பேசி மக்களிடம் குறைகளை கேட்டறிவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தரையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டது உள்ளிட்டவை அவருக்கு மக்களிடம் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாக்களில் அதிகமாக ஆட்சியர் ரோஹிணி பேசப்பட்டு வருகிறார்.

நாம் என்ன செய்தாலும் நம்மை குறை சொல்வதற்கே ஒரு சில கூட்டம் உள்ளது, அந்த கூட்டம் இவரையும் விட்டு வைக்க வில்லை

எப்படி கலெக்டர் நல்லது செய்யும் போதெல்லாம் சரியாக அவரை படம் பிடித்து அந்த புகைபடத்தை வைரலாக்குகின்றனர் என்றெல்லாம் கலாய்த்தனர்..

தற்போதைய காலகட்டத்தில் செல் போன் அனைவரும் கையிலும் உள்ளது, அப்படி இருக்க இவ்வாறு நல்லது செய்பவர்களை ஊக்கம் படுத்தும் விதமாக புகைபடம் எடுத்து பாராட்டுவது தவறு இல்லையே..