இயேசுவின் ஓவியத்தை சாதனை விலை கொடுத்து வாங்கிய சவுதி இளவரசர்!

இயேசுவின் ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கி, சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்!

201711161253516059_Leonardo-Da-Vincis-Painting-Of-Jesus-Christ-Sold-For-450_SECVPFஉலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசுவின் ஓவியமான ‘சல்வேட்டர் முண்டி’ என்ற ஓவியம் அண்மையில் ஏலத்தில் சாதனைத் தொகைக்கு விற்பனையானது. இதை, மொஹமட் பின் ஃபர்ஹான் அல்-சவுத் என்ற இளவரசர் 450 மில்லியன் டொலருக்கு வாங்கியிருந்தார்.

எனினும் உண்மையில் அந்த ஓவியத்தை அல்-சவுத் மூலமாக சவுதியின் இளவரசர் மொஹமட் பின் சல்மானே வாங்கியிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறையைச் சுட்டிக்காட்டி ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவ்வோவியம் அபுதாபியின் லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்வேட்டர் முண்டி என்ற இந்த ஓவியம் கி.பி. 1500ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்றும் லியனார்டோ டாவின்ஸியின் இறுதிப் படைப்பு என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இது வெறும் நகல் ஓவியமே என்று கூறப்பட்டுவந்தபோதும் இறுதியாக, அது டாவின்ஸியால் வரையப்பட்டதே என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.