குப்பை அகற்றும் தொழின்முறைக்கு கொரியா கடனுதவி!

குப்பை அகற்றும் தொழின்முறைக்கு உதவும் வகையில், கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி பதினான்கு மில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவிகளை இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலை, இலங்கைக்கான கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

13-1449994921-vijayakanth-cleanes-chennai-street6இத்திட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களுக்கும் 190 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

திடக் கழிவுகளை திறமையான முறையில் அகற்றுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். அதன்படி, வழங்கப்படவுள்ள வாகனங்கள் அனைத்தும் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் பாரியளவு குப்பைகளை திறமையான முறையில் அகற்றும் வல்லமை கொண்டன என்று கூறப்படுகிறது.

வட்டியில்லாக் கடன் முறையில் வழங்கப்படவுள்ள இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த  மொத்தமாக நாற்பது ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.