ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வீட்டிற்கு வந்த முதியவரை கட்டாயப்படுத்தி பெண் ஒருவர் உறவு கொண்டதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
பெருந்துறை, சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் மிளகாய் வியாபாரி. கடந்த வாரம் வீட்டில் இருந்து மாயமானார்.
மறுநாள் சிப்காட், ஓடைக்காட்டூர், மலையாண்டி காட்டுப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக, அவர் மகள் மாலதி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.
சாமிநாதன் மொபைல்போன் பதிவுகளின் அடிப்படையில், தனிப்படை அமைத்து, போலீசார் விசாரித்த நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜயமங்கலம், வின்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி இவர் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
தனியாக வசித்த இவருக்கும் சாமிநாதனுக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.
காணாமல் போன அன்று நல்ல மழை பெய்துள்ளது. அப்போது பாப்பாத்தி வீட்டுக்கு, சாமிநாதன் சென்றார்.
பாப்பாத்தி, அவரைக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே உடல் சிப்காட் காட்டுபகுதியில் வீசப்பட்டு உள்ளது. இதனை தனது மகன்கள் மூலம் மறைக்க முயற்சி செய்து இருக்கிறார். இறுதியில் நிகழ்ந்த சொதப்பலால் கூட்டாக சிக்கி கொண்டனர்.