2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவதும் இறுதியானதுமான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர அளித்த வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் கடந்த ஒரு மாதமாக சபையில் நடைபெற்று வந்தது.
இத்திட்டத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு கடந்த பதினாறாம் திகதி 151 வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது, மேற்படி திட்டத்துக்கு எதிராக 58 வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிரணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்திருந்தன.
இந்த நிலையிலேயே மூன்றாவது வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.