கெட்ட வார்த்தையில் திட்டிய நபரை அசிங்க படுத்திய நிஷா.!

nishakrishnan600_10298பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நிஷா. நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் பிரான்ஸ் சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் தங்களின் 2வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள்.

5a29fe2c3aaf4-IBCTAMILஅங்கு எடுத்த புகைப்படங்களை நிஷா கணேஷ் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் புகைப்படம் அழகாக இருக்கிறது. க்யூட், செம என்று கமெண்ட் செய்தனர். மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு மீண்டும் வருவீர்களா என்றும் சிலர் கேட்டார்கள். ஆனால் அதில் ஒருவர் பெண்களை இழிவு படுத்தும் வார்த்தையால் நிஷா கணேஷை திட்டி கமெண்ட் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த நிஷா நான் உங்க அம்மாவின் பெயரை கேட்கவில்லை என்று நெத்தியில் அடித்தது போன்று பதில் அளித்தார்.

மேலும் அவர், ஏன்? மீடியா இது போன்றவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை. மீடியாவில் வேலை செய்வது பிற வேலைகளை போன்றது தான். நீங்கள் கம்ப்யூட்டர் முன்பு வேலை பார்க்கிறீர்கள் நான் கேமரா முன்பு பார்க்கிறேன். அவ்வளவு தான்!! மீடியாவில் வேலை செய்யும் பெண்களை ஏன் திட்டுகிறார்கள்? கமெண்ட்டை நீக்குவதற்கு பதில் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன் என்று நிஷா தெரிவித்துள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.