பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் அந்நாட்டு அரசுடன் கூட்டாக மேற்கொண்டு வரும் சாலை பணிகளுக்கு வழங்கிவந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் சீன தரப்பில் இருந்து சீனர்களுக்கு வழக்கத்திற்கு மாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என சீன தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு முழு தகவலையும் தெரிவிக்காத இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகம், சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும், உதவி ஏதும் தேவை என்றால் உடனடியாக தூதரகத்தை நாடவேண்டும் என சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.