மற்றொரு திருமணம் பற்றியே பேசினோம் – மைத்திரியுடனான சந்திப்புக் குறித்து மகிந்த

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவின் மகனின் திருமண நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசியிருந்த போதிலும், அரசியல் இணைவு பற்றி அவருடன் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் அரசியல் பேசவில்லை. தாம் மற்றொரு திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார்.

நானும் கூட இன்னொரு திருமணத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதாக கூறினேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

mahinda-maithri

அதேவேளை, பொதுஜன முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் முடிவு இறுதியானது என்றும், வேட்புமனுக்களை  இறுதி செய்வதில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.