இந்தியா – மும்பை காந்திப்படாவைச் சேர்ந்த பரிதா பார்தி என்ற 43 வயது பெண் தன் கணவனைக் கொன்று கழவறை குழியில்; புதைத்து வைத்த சம்பவம் 13 வருடங்களுக்குப் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள காந்திப்படாவில் உள்ள பரிதா பார்தி என்ற பெண் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் அவர் வீட்டைப் பரிசோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு விபச்சாரத் தொழில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.
மேலும், பரிதா பார்தி மற்றும் வாடிக்கையாளர் ஒருவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் பல கொலைகள் செய்துள்ளதாகவும், சொந்தக் கணவரையே கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அந்தத் தகவலின் அடிப்படையில் அவர் வீட்டை மீண்டும் சோதனை செய்த காவல்துறையினர், கழிவறை குழியில்; அவரது கணவரின் எலும்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நடந்த விசாரணையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் சதேவ் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரைத் தலையில் அடித்துக் கொன்று கழிவறை குழியில்; புதைத்தது தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை இடம்பெற்றுவருகிறது.